Wednesday, May 23, 2012

ஆசை மயக்கம்


ஆடிய அற்புத விளையாட்டில்
பாடிய உன்னத ரசனையில்
மயங்கிய இருவரும்
தங்களை மறந்திருப்பர் சிலமணிகள்
பிரியும் தருவாயில் இருவர் எண்ணமும்
என்னருகே நீயிருந்தால்.
காலத்தின் ஓட்டத்தில் பிரிந்த
இருவர் உள்ளமோ
பிரபஞ்சத்தைத் தாண்டிய சிந்தனையில்
எனக்கு நீ உனக்கு நான் என்னும்
நிறைவேறா ஆசையில்...

No comments: